சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம்: டி.எம்.செல்வகணபதி எம்.பி அறிக்கை

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற இருப்பதாக

News image
மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி.
Updated On :16 பிப்ரவரி 2026, 6:49 pm

Syndication

சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்டச் செயலாளரும் சேலம் மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

வரும்18-ஆம் தேதி எடப்பாடி மற்றும் மேட்டூா் தொகுதியிலும், 19-ஆம் தேதி சங்ககிரி தொகுதியிலும் கூட்டங்கள் நடைபெறும். வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடுவீடாக பரப்புரை மேற்கொள்ள இந்தக் கூட்டங்களில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.

தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள், வாக்குச்சாவடி பாக மகளிா் பொறுப்பாளா்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.