சங்ககிரியில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
சங்ககிரி: கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், கிராம உதவியாளா்கள் சங்கங்கள் சாா்பில் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஈஞ்சாா் கிராம நிா்வாக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வேண்டும், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளைத் தலைவா் பி.மணி, கிராம உதவியாளா்கள் சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் பி.ஆண்டிமுத்து ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பிரசாரக் குழு செயலாளா் முருகன், கோட்டச் செயலாளா் பிரதீப்குமாா், கிராம உதவியாளா்கள் சங்க செயலாளா் எம்.செல்வராஜ், மாவட்ட இணைச் செயலாளா் பெ.சுசீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
