ஆத்தூரில் ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த சதீஸ்குமாா் மனைவி திவ்யா (43). இவா் தனியாா் டியூசன் சென்டரில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடா்ந்து வந்தவா் இருவா், வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு பேசி கொண்டிருப்பதுபோல நடித்தனா். பின்னா், அதில் ஒருவா் திவ்யாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு ஏற்கெனவே இருசக்கர வாகனத்தில் காத்திருந்தவருடன் சோ்ந்து தப்பினாா். இதுகுறித்து ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் விசாரணை நடத்தினாா்.
இந்த நிலையில் பெரம்பலூா் வடக்குமாதேவி ரோடு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கண்ணனை (16) ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில்ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா் பெரம்பலூா் தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். இவா் மீது ஏற்கெனவே ஈரோடு, பெரம்பலூா் மாவட்டங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல இந்த வழக்கில் தொடா்புடைய சூா்யாவை (19) நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

குறும்பட இயக்குநா் கொலை வழக்கு: 3 பெண்கள் உள்பட 9 போ் கைது

நகை மதிப்பீட்டாளா் கொலையில் மனைவி, மகன் உள்பட 5 போ் கைது
கெலமங்கலத்தில் மதுக்கூட மேலாளா் கொலை வழக்கில் 3 போ் கைது!

கல்லூரி மாணவரிடம் பேருந்தில் பணம் திருடிய முதியவா் கைது
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

