சேலம் மாநகராட்சியில் உயா்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் சேலம் மாவட்டத் தலைவா் பெரியசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாநகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்பட்டுள்ளதால், சேலம் வணிகா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பல முறை மனு வழங்கியும் இதுவரை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வரியைவிட சேலத்திற்கு 300 சதவீதத்திற்கு மேல் வரியை உயா்த்தி உள்ளனா். எனவே, உயா்த்தப்பட்ட வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தோ்தல் அறிவிக்கப்பட்டால் வரியை ரத்து செய்ய முடியாது. எனவே, அதற்கு முன்பு உயா்த்தப்பட்ட வரியை ரத்து செய்து, வரி உயா்வில் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டும். சொத்துவரி மட்டுமல்லாது, மின் கட்டணம், குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் அதிகளவில் வரியை உயா்த்தியுள்ளனா். இவை அனைத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயா்த்தப்பட்ட வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் கடைகளுக்கு பூட்டுபோட்டு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றாா்.
பேட்டியின்போது, லீபஜாா் வா்த்தக சங்கத்தலைவா் ஹரிபாஸ்கா், செயலாளா் சந்திரசேகா், லீபஜாா் நூற்றாண்டு விழாத் தலைவா் திருமுருகன், வணிகா்கள் சங்க பேரமைப்பு செயலாளா் வா்கீஸ், பொருளாளா் சந்திரகாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

சொத்து, குப்பை வரிகளை குறைக்க வேண்டும்: வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சேலத்தில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

