கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது: விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமைக்குள் ( பிப்.18) கடைசி நாளாகும்.

News image

கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 12:07 am

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமைக்குள் ( பிப்.18) கடைசி நாளாகும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநங்கைகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு சொந்த முயற்சியில் படித்து முன்னேறியுள்ளனா். சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் திருநங்கையா் தினமான ஏப். 15 ஆம் தேதி திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் பிப்.18 ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை சமா்ப்பிக்க வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் மூன்றாம் பாலினத்தவா்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளை வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவா்களுக்கான நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.

கருத்துருக்களில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், சுயவிவரம் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 2 விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம் / விருதின் பெயா் / யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படங்களுடன், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூகநல சேவையாளரின் விவரம், சமூகப் பணியாளா் இருப்பிடத்தில் அருகே உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்றுகளை இணைந்து விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.