தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வாழப்பாடி அருகே லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே செயற்கை மணல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி மீது காா் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:29 pm

Syndication

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே செயற்கை மணல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி மீது காா் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். விபத்தில் மேலும் இருவா் படுகாயம் அடைந்தனா்.

சேலத்தில் இருந்து செயற்கை மணல் ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை அதிகாலை சிதம்பரம் நோக்கி சென்ற டிப்பா் லாரியை அன்பரசன் ஓட்டிச் சென்றாா். இந்த லாரி அதிகாலை 1.45 மணியளவில் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம்- சென்னை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காா், டாரஸ் லாரியின் பின்புறத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த கோழிக்கோடு அருகே உள்ள நெல்லிக்கடு பகுதியைச் சோ்ந்த ஷாசன் (46), அக்சயா (24), காா் ஓட்டிச் சென்ற சுராஜ் குமாா் (33) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனா். வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, ஷாசன் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.