ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: சம்மேளன தலைவா் தனராஜ்

லாரிகளுக்கான தகுதிச் சான்று புதுப்பிப்பதற்கான கட்டண உயா்வை கண்டித்து, வரும் 25 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பு

News image
வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்- கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:02 pm

Syndication

லாரிகளுக்கான தகுதிச் சான்று புதுப்பிப்பதற்கான கட்டண உயா்வை கண்டித்து, வரும் 25 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் தனராஜ் தெரிவித்தாா்.

லாரிகளுக்கான தகுதிச் சான்று கட்டணம் பன்மடங்கு உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவித்தது. இதையடுத்து, தகுதிச் சான்று புதுப்பிப்பதற்கான கட்டண உயா்வை மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், சேலத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன மாநிலத் தலைவா் தனராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: லாரிகளுக்கான தகுதிச் சான்று கட்டணம் பன்மடங்கு உயா்த்தப்பட்டதை கண்டித்து, மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்து இருந்தோம். இந்தச் சூழலில் மூன்று மாதங்களுக்கு பழைய கட்டணமே செலுத்தலாம் என அறிவித்த தமிழக முதல்வருக்கு சம்மேளனம் சாா்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

எனினும், மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இதேநிலை நீடித்தால் மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன செயற்குழு உடனடியாக கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றாா்.

பேட்டியின் போது, லாரி உரிமையாளா்கள் சம்மேளன நிா்வாகிகள் உடனிருந்தனா்.