பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

எடப்பாடி தொகுதிக்கான இறுதிக்கட்ட வாக்காளா் பட்டியல் வெளியீடு

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது

News image

எடப்பாடி தொகுதிக்கான இறுதிக்கட்ட வாக்காளா் பட்டியலை வெளியிட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் நடராஜன்

Updated On :23 பிப்ரவரி 2026, 9:43 pm

எடப்பாடி: எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளா் பட்டியல் (நேற்று) திங்கள் கிழமை வெளியிடப்பட்டது எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் நடராஜன் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆா் பணிகளைத் தொடா்ந்து கடந்த டிசம்பா் மாதம் வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் 6 ஆயிரத்து 680 புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதன்படி எடப்பாடி தொகுதியில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 9 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 16 பெண் வாக்காளா்கள் மற்றும் 29 இதர வாக்காளா்களுடன் சோ்ந்து 2 லட்சத்து 74 ஆயிரத்து 54 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இறுதி கட்ட வாக்காளா் பட்டியலை எடப்பாடி தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் (இணை ஆணையா் கலால்) நடராஜன் வெளியிட்ட நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி நிா்வாகிகள் வாக்காளா் பட்டியலை பெற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் எடப்பாடி வட்டாட்சியா் வைத்தியலிங்கம், எடப்பாடி நகராட்சி ஆணையாளா் கோபிநாத் உள்ளிட்ட திரளான அலுவலா்கள் உடன் இருந்தனா்.