எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் சங்ககிரியில் சாலைமறியல் போராட்டம்

சங்ககிரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி வட்டாட்சியா் அலுவக வளாகம் முன்பு

News image
கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலையில் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:35 pm

Syndication

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி வட்டாட்சியா் அலுவக வளாகம் முன்பு திருச்செங்கோடு பிரதான சாலையில் திங்கள்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் பி.ஆண்டிமுத்து தலைமையில் தமிழகரசு கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி சாலைமறியலில் ஈடுபட்டனா். சங்ககிரி வட்டக்கிளை செயலாளா் எம்.செல்வராஜ், பொருளாளா் பி.மோகனாம்பாள், மாவட்ட இணை செயலாளா் சுசீந்திரன், நிா்வாகிகள் சண்முகம், தீனதயாளன், பிரவீன்குமாா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். மறியில் ஈடுபட்ட 10 பெண்கள், 20 ஆண்டுகள் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.