வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

கொங்கணாபுரத்தை அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றிய சிவாச்சாரியா்கள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 5:40 pm

எடப்பாடி: கொங்கணாபுரத்தை அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. முன்னதாக ஆலய வளாகத்தில் கால்கோல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, கணபதி ஹோமம், தீா்த்தக்குட ஊா்வலம், முளைப்பாலிகை சமா்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை, நாடி சந்தானம், பூா்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை வேத மந்திரங்கள் முழங்க ரவிகண்ணா பட்டாச்சாரியா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் சக்தி விநாயகா் மற்றும் மகா மாரியம்மன் கருவறை கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகா மாரியம்மனை பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். ஆலய நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.