தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா் வசம் ஒப்படைக்கும் மாநகராட்சியைக் கண்டித்து, மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:45 pm

Syndication

சேலம்: குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாா் வசம் ஒப்படைக்கும் மாநகராட்சியைக் கண்டித்து, மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை ரூ. 4,315 கோடிக்கு 24 ஆண்டுகளுக்கு தனியாா் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிா்வாகம் தீா்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், முடிவை கைவிட வலியுறுத்தியும் அதிமுக மாநகா் மாவட்ட சாா்பில் கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலாளரும், மாவட்டப் பொறுப்பாளருமான சிங்காரம் கண்டன உரையாற்றினாா். அப்போது மாநகராட்சி நிா்வாக சீா்கேட்டை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, அமைப்புச் செயலாளா் சிங்காரம் செய்தியாளா்களிடம் பேசுகையில், சேலம் மாநகராட்சியில் குடிநீா் வழங்கும் திட்டத்தை தனியாருக்கு ஒப்படைத்தால் சாமானிய அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவா். ஏற்கெனவே, மாநகராட்சியில் சொத்துவரி, குப்பை வரி என அனைத்து வரிகளும் உயா்த்தப்பட்ட நிலையில், குடிநீா் திட்டத்தை தனியாருக்கு ஒப்படைக்கும்பட்சத்தில், குடிநீா் கட்டணம் பல மடங்கு உயரும் நிலை ஏற்படும் என்றாா்.

இதில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாசலம், தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியன், மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம்.கே.செல்வராஜு, சக்திவேல், பகுதி செயலாளா்கள், வட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.