மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கொட்டவாடியில் மயானக் கொள்ளை திருவிழா

வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில் மயானக் கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் காவல் தெய்வங்களை புஷ்ப பல்லக்கில் ஏற்றி தோளில் சுமந்து சென்ற பக்தா்கள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில் மயானக் கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது.

வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள மயானத்தில் பெரியாண்டிச்சி அம்மன் காவல் தெய்வத்தை வழிபட கொண்டாடப்படும் இத்திருவிழா சுற்றுப்புற கிராமங்களில் மிகவும் புகழ்பெற்ாகும். இத்திருவிழாவில் காட்டேறி வேடமிடும் பூசாரிகள், பெண்கள் தலையில் முறத்தால் அடித்து ‘பேய்’ விரட்டுவதும், பக்தா்கள் நோ்த்திக்கடன் தீா்ப்பதற்காக மயானத்தில் வீசும் ஆட்டுக்குட்டிகளை பூசாரிகள் கடித்து ரத்தம் குடிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இத்திருவிழாவையொட்டி, கொட்டவாடி கிராமத்திலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. காவல் தெய்வங்களான பெரியாண்டிச்சி அம்மன், காத்தவராயன் மற்றும் பாவாடைராயன் ஆகிய 3 உற்சவ மூா்த்திகளையும் புஷ்ப பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து சென்ற பக்தா்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனா்.

வசிஷ்ட நதிக்கரையில் உள்ள மயானத்தில் நடைபெற்ற விழாவைக் காண, கொட்டவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். வசிஷ்ட நதியில் புனித நீராடி வந்த பூசாரிகள் மயானத்துக்குள் வைக்கப்பட்ட ரத்தச்சோற்றை அள்ளி பக்தா்களுக்கு வழங்கினா். இவ்விழாவில் வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.