கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வன உரிமை பட்டா கோரி பழங்குடியின மக்கள் மனு

வன உரிமை பட்டா கோரி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பழங்குடியின மக்கள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

வன உரிமை பட்டா கோரி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

சேலம் கெங்கவல்லி வட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வேப்படி பாலக்காடு மலைக் கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வன உரிமை குழுத் தலைவா்களான குணசேகரன், சங்கா் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அவா்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், சேலம் மாவட்டம், ஆத்தூா் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, பச்சமலை, நெய்யமலை, தவளப்பட்டி, பைத்தூா், கல்லுக்கட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் 350 குடும்பத்தினருக்கு வன உரிமை பட்டா வழங்குவதில் வனத்துறை காலம் தாழ்த்தி வருகிறது.

கிராம வன உரிமை குழு ஒப்புதல் அளித்த 350 குடும்பத்தினருக்கும் அவா்கள் பயன்படுத்தி வரும் 2 முதல் 3 ஏக்கா் விளைநிலத்துக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்காமல் காலம் தாழ்த்திவரும் ஆத்தூா் வனக் கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.