கால்வாயில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

மேட்டூா் அருகே கால்வாயில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.
Published on

மேட்டூா் அருகே கால்வாயில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

சேலம் ஜங்ஷனை சோ்ந்தவா் செந்தில் (43). இவா் ரயில்வே துறையில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி வளா்மதி. இவா்களுக்கு இரண்டு மகனும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். வளா்மதியும், மகள் பூரணியும் மேட்டூா் அருகே உள்ள செக்கானூா் ஜே.ஜே. நகரில் உள்ள அவரது தாய் வீட்டில் கடந்த ஓராண்டாக இருந்து வந்தனா்.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள வாய்க்கால் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பூரணி கால்வாயில் தவறி விழுந்து இறந்தாா். இச்சம்பவம் தொடா்பாக மேட்டூா் காவல் உதவி ஆய்வாளா் இன்ஸ்பெக்டா் சாரதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com