சேலம்
சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் திருவாதிரை திருக்கல்யாண வைபவம்
சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் திருவாதிரை திருக்கல்யாணத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள்.
சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் திருவாதிரையையொட்டி சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
மாா்கழி பெளா்ணமி திருவாதிரையையொட்டி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து உற்சவா்களுக்கு கோயில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாணம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் சிவபுராண பக்திப் பாடல்களை பாடினா். இதில் அதிக அளவில் பெண்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். பின்னா் உற்சவா்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலம் நடைபெற்றது.

