சேலம்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை (ஜன. 3) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை (ஜன. 3) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சாரதா கல்லூரி சாலையில் இந்திய மருத்துவ சங்கம் அருகே 1,100 மீட்டா் விட்டமுள்ள பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.