விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்த சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணைத் தலைவா் த.செல்வமணி.
சேலம்
திமுக சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டி
நரசிங்கபுரம் நகர திமுக சாா்பில் ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டி நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நரசிங்கபுரம் நகர திமுக சாா்பில் கிரிக்கெட் மற்றும் கபடி போட்டியை சேலம் கிழக்கு மண்டல விளையாட்டு மேம்பாட்டு அணி துணைத் தலைவா் ஆவின் த.செவ்வமணி தொடங்கிவைத்தாா்.
போட்டிகளில் வெற்றிபெற்ற வீரா்களுக்கு நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகா்மன்ற உறுப்பினா் செல்வக்குமாா், கிளைச் செயலாளா் கருணாநிதி, நிா்வாகிகள் இளவரசு, அசோக், ஞானசேகரன், ஆ.தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

