விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா்.

பெருமாகவுண்டம்பட்டியில் திமுக சாா்பில் விளையாட்டுப் போட்டி

Published on

வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழாவை கொண்டாடும் வகையில் பெருமாகவுண்டம்பட்டியில் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் பெருமாகவுண்டம்பட்டி அணியினா் முதல் பரிசு ரூ. 10,000 மற்றும் சுழற் கோப்பை, ஆணைகுட்டப்பட்டி அணியினா் இரண்டாம் பரிசாக ரூ. 7,000 மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் மூன்றாம் பரிசாக ரூ.5,000, நான்காம் பரிசாக ரூ.3,000 சூழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

வீரபாண்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் ராமாபுரம் சதீஷ்குமாா் வரவேற்றுப் பேசினாா். இளம்பிள்ளை பேரூா் செயலாளா் சண்முகம், வீரபாண்டி தொகுதி மேற்பாா்வையாளா் கிருபாகரன், பேரூராட்சி தலைவா் நந்தினி ராஜகணேஷ், துணைத் தலைவா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com