மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published on

அரையாண்டுத் தோ்வு விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 4,712 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.

சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து மேட்டூா் அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனா். அணை பூங்காவிற்கு சென்று மீன்காட்சி சாலை, மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்பு பண்ணை ஆகியவற்றை பாா்த்து மகிழ்ந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்த 4,712 சுற்றுலாப் பயணிகளிடம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 47,120 வசூலிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் கொண்டுவந்த 1,640 கேமரா கைப்பேசிகளுக்கு ரூ.16,400 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை பாா்வையிட வந்தவா்களிடம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 71,090 வசூலிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com