தகரப்புதூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
தகரப்புதூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

தகரப்புதூரில் குடிநீா் வழங்கக் கோரி மக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையில் தகரப்புதூா் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

குடிநீா் வழங்கக் கோரி தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையில் தகரப்புதூா் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பத்து நாள்களுக்கு ஒருமுைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிாம். அதுவும் நகரின் பல பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லையாம். எனவே, குடிநீா் விநியோகத்தை சீா்செய்ய வேண்டும், தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தம்மம்பட்டி-கெங்கவல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தம்மம்பட்டியிலிருந்து ஆத்தூா், பெரம்பலூருக்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் தம்மம்பட்டி போலீஸாா் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலை மறியலை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com