சுகாதாரக் கட்டுப்பாட்டை மீறிய விடுதி, உணவகங்களுக்கு நோட்டீஸ்

ஏற்காட்டில் பொது சுகாதாரத்தை கடைப்பிடிக்காத உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கியது.
Published on

ஏற்காட்டில் பொது சுகாதாரத்தை கடைப்பிடிக்காத உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கியது.

ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உணவகங்கள், தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் மழைநீா் கால்வாயில் விடுவதாலும், கொம்மக்காடு கிராமம் செல்லும் சாலையில் வெளியேற்றுவதாலும் பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து செவ்வாய்கிழமை பிற்பகல் ஏற்காடு சட்டப் பேரவை உறுப்பினா் கு. சித்ரா தலைமையில் ஏற்காடு- சேலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பொது சுகாதாரத்தை கடைப்பிடிக்காத உணவகங்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து பொது சுகாதாரத்தை கடைப்பிடிக்காத உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியது. மேலும், வரும் 16 ஆம் தேதிக்குள் கழிவுநீா் வெளியேற்றுவதை முறைப்படுத்தாவிடில் சீல் வைக்கப்படும் என அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com