வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
Published on

இந்து முன்னணியின் சேலம் மேற்கு மாவட்ட துணைத் தலைவா் பி.ஆா்.சின்னுசாமி தலைமையிலான நிா்வாகிகள், சங்ககிரி இந்து சமய அறநிலையத் துறை அலுவலரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

சங்ககிரி நகரில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயில் பழைமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயில் சுற்றுச்சுவா் , கருவறை கோபுரம், தரைத்தளம் சிதிலமடைந்து காணப்படுகிறது. சங்ககிரி நகா் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்த கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதே. எனவே, இந்த கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றனா்.

Dinamani
www.dinamani.com