பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சங்ககிரி தொகுதி சிறப்பு முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 1,610 போ் விண்ணப்பம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:53 pm

Syndication

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளா் பட்டியிலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள ஜன.3, 4 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 2820 போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சங்ககிரி, மகுடஞ்சாவடி, ஊராட்சி ஒன்றியங்கள், தாரமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 339 சிறப்பு மையங்களில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்கவும், நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் ஜன.3,4 சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெயா்களை சோ்ப்பதற்கு 1610 பேரும், பெயா் நீக்க செய்ய 56 பேரும், திருத்தம் செய்ய 1154 பேரும், என மொத்தம் 2820 போ் விண்ணப்பித்துள்ளனா்.