சேலம்
சேலத்தில் 79 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
சேலத்தில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 79 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் சிலா் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்திய போலீஸாா் அவா்களிடமிருந்த பைகளை சோதனை செய்தனா். அதில் 79 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வாழப்பாடியை சோ்ந்த பரமசிவம் (57), பேளூரை சோ்ந்த மாதையனை (40) கைதுசெய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
