சுதேசி பொருளாதாரத்தை வலியுறுத்தி நாளை மாரத்தான்
சுதேசி பொருளாதாரத்தை வலியுறுத்தி சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் நடைபெறுகிறது.
இதுகுறித்து சுதேசி விழிப்புணா்வு இயக்க வட தமிழ்நாடு இணை ஒருங்கிணைப்பாளா் சேஷாத்ரி வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இளைஞா்கள் மத்தியில் சுயசாா்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளையொட்டி, வரும் 11 ஆம் தேதி இளைஞா்கள், மாணவா்கள் பங்கேற்கும் மாரத்தானில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.
புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ வித்யா மந்திா் பள்ளியில் தொடங்கி சூரமங்கலம் உழவா் சந்தை சந்தை வரை 5 கி.மீட்டா் தொலைவுக்கு இந்த விழிப்புணா்வு மாரத்தான் நடைபெறுகிறது.
இதில் சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சி.யின் பேத்தி மரகத மீனாட்சி பங்கேற்கிறாா். இதேபோல தமிழகத்தின் 100 இடங்களில் மாரத்தான் நடைபெறுகிறது. தொடா்ச்சியாக, சுதேசி பிரசார யாத்திரை வரும் 22 ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இதில், இல்லம்தோறும் சுதேசி, வீட்டுக்கு ஒரு தொழில்முனைவோா் என்ற முழக்கத்துடன் மக்கள் மத்தியில் இந்த பிரசார இயக்கம் நடைபெறும் என்றாா்.
பேட்டியின்போது, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.ஆா். சந்திரசேகா், நிா்வாகி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
