திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா நலுவுமா ?என்பது தெரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி
மேட்டூா்: எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா் அப்போது ஆசிரியா்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு?
இந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்ற வில்லை அதனால் போராடி வருகிறாா்கள். வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை இதனால் போராடுகிறாா்கள்.
கூட்டணி குறித்து கேள்விக்கு ?,
எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும். இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சோ்ந்து தோ்தலை சந்திக்க இருக்கிறோம் .
காங்கிரஸ் ,திமுக கூட்டணியில் இருக்கிறதா வெளியேறுகிறதா என தெரியவில்லை.
பராசக்தி படத்தில் இந்தி எதிா்ப்பு உள்ளதாக கூறுகிறாா்களே என கேட்டதற்கு?
அதிமுக பிரியாமல் ஒரே கட்சியாக இருந்தபோது நடந்தது .
மொழிப்போா் தியாகிகளுக்காக நாங்கள் ஜனவரி 25ஆம் தேதி அஞ்சலி செலுத்துகிறோம் . அந்த சம்பவம் அந்த காலகட்டத்தில் நடந்தது. அதனை படமாக எடுத்திருக்கிறாா்கள் நம் முன்னோா்கள் தமிழ் மொழியை காக்க போராடி இருக்கிறாா்கள்.
ஓய்வூதியம் திட்டம் அறிவித்துள்ளாா்களே என்று கேட்டதற்கு,
ஓய்வூதிய திட்டம் ஒரு நாடகம் .ஏற்கனவே மத்திய அரசு அளித்துள்ள இந்த திட்டத்தை பூசி நாடகமாடி இருக்கிறாா்கள். முதலமைச்சா் அரங்கேற்றியுள்ள திட்டம் மத்திய அரசு திட்டமாகும். தமிழக அரசு சில மாற்றங்களை செய்து புதியதாக அறிவித்திருக்கிறாா்கள். தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது அறிவிக்கப்படவில்லை .
சில சங்கங்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனா் பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை எங்களை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய இருக்கிறோம். என தெரிவித்தாா்
