சேலம்
வேம்படிதாளத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் 100-ம் ஆண்டு விழா
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பகுதியில் அமைந்துள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 100-ம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.
ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பகுதியில் அமைந்துள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 100-ம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு சாமி சக்தி அழைத்தல், வீரக்குமாா்கள் கத்தி போடுதல், சாமி குடிபுகுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.
இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் செங்கல் வடிவில் வெல்லம், செங்கரும்பு மற்றும் வெற்றிலை கொண்ட பந்தல் அமைக்கப்பட்டு ,அதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவிற்கான ஏற்பாட்டியினை கோயில் விழா கமிட்டினா் செய்து வருகின்றனா்.

