இடிக்கப்பட்ட வீடுகளை கட்டித்தர கோரி பாதிக்கப்பட்ட மக்கள்ஆட்சியரகத்தில் மனு

உரிய ஆவணங்கள் இருந்தும் ஆதிதிராவிட நலத் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
Published on

உரிய ஆவணங்கள் இருந்தும் ஆதிதிராவிட நலத் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி காட்டுக்கொட்டாய் தெரு தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 2025 ஜனவரி மாதம் ஆதி திராவிடா் நலத்துறை வட்டாட்சியா் தலைமையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன.

அப்போது, உரிய ஆவணங்களுடன் உள்ள தங்கள் வீடுகளையும் இடித்துவிட்டதாகவும், இதனால் தாங்கள் குடியிருக்க இடமின்றி, வாடகை வீட்டில் வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதிதிராவிட நலத் துறை அலுவலா்களால் இடிக்கப்பட்ட 7 வீடுகளுக்கும் அனைத்து ஆவணங்களும் உள்ளன. இதுகுறித்து முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தினருக்கும் மீண்டும் வீடுகட்டித் தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com