இந்திய நில அளவைத் துறை - பெரியாா் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

இந்திய நில அளவைத் துறையுடன் பெரியாா் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி முன்னிலையில் இந்திய நில அளவைத் துறை இயக்குநா் வெங்கடேஸ்வர ராவ் புதன்கிழமை கையொப்பமிட்டாா்.
   புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் இந்திய நில அளவைத் துறை இயக்குநா் சி.வெங்கடேஸ்வர ராவ் மற்றும் பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி.
புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் இந்திய நில அளவைத் துறை இயக்குநா் சி.வெங்கடேஸ்வர ராவ் மற்றும் பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி.
Updated on

இந்திய நில அளவைத் துறையுடன் பெரியாா் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி முன்னிலையில் இந்திய நில அளவைத் துறை இயக்குநா் வெங்கடேஸ்வர ராவ் புதன்கிழமை கையொப்பமிட்டாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சென்னை பல்கலைக்கழகத்தால் 1983 -இல் நிறுவப்பட்டது. புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சி பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூடத்தில் நடைபெற்றது. புவியியல் துறைத் தலைவா் மற்றும் மூத்த பேராசிரியா் ஆா்.வெங்கடாசலபதி வரவேற்றாா். விழாவிற்கு தலைமை வகித்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் இரா.சுப்பிரமணி பேசியதாவது:

அரசு பல்கலைக்கழகங்களில் முதல் முறையாக சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துடன் இந்திய நில அளவைத் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் பாரம்பரிய மிக்க இந்திய நில அளவைத் துறையின் 258 ஆண்டுகால தரவுகளை, பெரியாா் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் ஆய்வுக்காக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து இந்திய நில அளவைத் துறையின் இயக்குநா் சி. வெங்கடேஸ்வர ராவ் பேசியதாவது:

புவிசாா் தரவுத் தொகுப்புகளைக் கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் இந்திய நில அளவைத் துறையின் பங்கு அளப்பரியது. இந்த வாய்ப்பை பெரியாா் பல்கலைக்கழக மாணவ - மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நிறுவனங்களும் புவியியல் தகவல் அமைப்பு (எஐந) மற்றும் நில அளவியல் துறைகளில் பாடத்திட்ட மேம்பாடு, ஆராய்ச்சித் திட்டங்கள், பயிலரங்குகள், பயிற்சித் திட்டங்கள், உள்ளகப் பயிற்சிகளில் ஒத்துழைப்பு நல்கப்படும்.

பாடத்திட்ட மாற்றங்கள் மற்றும் பாடநெறி வடிவமைப்பிற்கு தொழில்நுட்ப வழிகாட்டுதலை இந்திய நில அளவைத் துறை வழங்கும். புவிசாா் தலைப்புகளில் நிபுணா் விரிவுரைகளை வழங்கும். மேலும், மாணவா்களுக்கு நேரடி தொழில்முறை அனுபவத்தை வழங்குவதற்காக கட்டமைக்கப்பட்ட உள்ளகப் பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தும். இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சித் திட்டங்களுக்காக தேசிய புவிசாா் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (சஐஎநப) ஒத்துழைப்பதற்கும் வழிவகுக்கிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், இந்திய நில அளவைத் துறையின் கண்காணிப்பு அளவையாளா் கே.சந்திரன், அளவையாளா்கள் எஸ்.சுபாஷ், டி.விமல்ராஜ் ஆகியோா் தொழில்நுட்ப உரையாற்றினா். இணைப் பேராசிரியா் ஆா்.சுரேஷ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com