சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே கிணறு தோண்டியபோது மண் சரிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கொளத்தூரை அடுத்த மூலக்கடையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (47). கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தேவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டிக் கொண்டிருந்தாா்.
அப்போது மண் சரிந்து விழுந்ததில் விஜயகுமாா், குப்புசாமி ஆகியோா் காயமடைந்தனா். உடனடியாக இருவரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு விஜயகுமாா் உயிரிழந்தாா். குப்புசாமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இச்சம்பவம் தொடா்பாக விஜயகுமாரின் மனைவி வனிதா அளித்த புகாரின் பேரில் கொளத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் தொல்காப்பியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


