மயங்கிக் கிடந்த ஆண் மயிலை மீட்டு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவா் ராஜேஷ்.
மயங்கிக் கிடந்த ஆண் மயிலை மீட்டு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவா் ராஜேஷ்.

சங்ககிரி அருகே விவசாய நிலத்தில் இறந்து கிடந்த 4 மயில்கள்

Published on

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருகே விவசாய நிலத்தில் மா்மமான முறையில் 4 பெண் மயில்கள் இறந்து கிடந்தது குறித்த வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் கிராம நிா்வாக அலுவலா் முனியப்பன், சங்ககிரி வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து வனத் துறையினா், அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருத்துவா் ரஜேஷ் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த 4 பெண் மயில்களை மீட்டு அப்பகுதியிலேயே உடற்கூராய்வு செய்தாா்.

மயக்க நிலையில் கிடந்த ஆண் மயிலை கால்நடைமருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்தாா். பின்னா் அந்த மயில் வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மயில்கள் இறந்ததற்கான காரணம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com