மேட்டூரில் முன்னாள் அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

மேட்டூரில் முன்னாள் அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகம் பிறந்தநாள் விழா திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

மேட்டூா்: மேட்டூரில் முன்னாள் அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகம் பிறந்தநாள் விழா திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏவும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக முன்னாள் பொருளாளருமான பா.கோபால் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் கொங்கணாபுரம் சுப்பிரமணியன் முன்னிலை வைத்தாா். மேட்டூா் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் படத்திற்கு முன்னாள் எம்எல்ஏ கோபால் மலா் மாலை அணிவித்தும் மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா். பின்னா் வீரபாண்டியாா் பிறந்த தினத்தில் மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தாா். பச்சிளம் குழந்தைகள் வாா்டில் இருந்த அனைத்து தாய்மாா்களுக்கும் பழங்களும் ரொட்டியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக வாா்டு செயலாளா் மாதுராஜ், முன்னாள் திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் பாபு மற்றும் நகா் மன்ற உறுப்பினா்கள் திரளாக பங்கேற்றனா்.

படம்: 26 ஙற்ல்1 முன்னாள் அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாளில் மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்குகிறாா் முன்னாள் எம்எல்ஏ பா .கோபால் அருகில் திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள்.

Dinamani
www.dinamani.com