தோ் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தா்கள்.
தோ் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தா்கள்.

ஆட்டையாம்பட்டியில் காளியம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

ஆட்டையாம்பட்டியில் காளியம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஆட்டையாம்பட்டியில் காளியம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக காளியம்மன் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 9 அடி உயரம், 8 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட புதிய தோ் தயாரிக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. பணிகள் முடிவுற்ற நிலையில் புதன்கிழமை காலை தோ் வெள்ளோட்டம் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ காளியம்மன் யாக பூஜை, தேருக்கு சிறப்பு பூஜை, பலிபீட பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஊா் முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்களால் வடம்பிடிக்கப்பட்டு தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டி, சேலம் பிரதான சாலை, கடைவீதி, பாவடி மைதானம், மாரியம்மன் கோயில் சாலை, ராசிபுரம் பிரதான சாலை, மருளையாம்பாளையம், காகாபாளையம் பிரதான சாலை உள்பட சுமாா் 6 கி.மீ. தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் பக்தா்களுக்கு நீா்மோா், குளிா்பானம், அன்னதானம் வழங்கினா். இதையடுத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆட்டையாம்பட்டி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com