மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடியரசு தினத்தில் இயங்கிய 78 நிறுவனங்கள் மீது வழக்கு

சேலம் மாவட்டத்தில் விடுமுறை நாளான குடியரசு தினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 78 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 10:58 pm

சேலம் மாவட்டத்தில் விடுமுறை நாளான குடியரசு தினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 78 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் பொறுப்பு சண்பகராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சாந்தி, தொழிலாளா் இணை ஆணையா் புனிதவதி ஆகியோரின் ஆலோசனையின்படி, தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

குறிப்பாக, தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ், உரிய படிவங்களை அனுப்பி வைத்து முன்அனுமதி பெறாமல் செயல்பட்ட 39 கடைகள், 62 உணவு நிறுவனங்கள், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 105 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிகளை மீறிய 78 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.