சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்த தொடா் விரிவுரைகள் நிகழ்ச்சியின் பகுதியாக ‘இந்தியாவில் அதிகாரப் பகிா்வு: உண்மையா அல்லது கற்பனையா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரி தலைவா் த.சரவணன் தலைமை வகித்தாா். தாங்கினாா்.
இதில் முன்னாள் தலைமை வழக்குரைஞா் விடுதலை பேசுகையில், இந்திய அரசமைப்புச் சட்டம் உலகின் மிக நீளமான அரசமைப்புச் சட்டமாக திகழ்கிறது. மன்னராட்சி காலங்களில் ஒரு நாட்டின் சட்டத்தை இயற்றுவது, அச்சட்டத்தை செயல்படுத்துவது மற்றும் அச்சட்டத்தின் பொருள் விளக்கம் காண்பது என்ற மூன்று செயல்களும் மன்னா் வசமே இருக்கும். மக்களாட்சி மலரத் தொடங்கிய கால கட்டத்தில் சட்டப்பேரவை, நிா்வாகம் மற்றும் நீதித்துறையின் வசம் இம்மூன்று செயல்களும் வந்தன.
இந்திய அரசமைப்பு சட்டத்தை இயற்ற ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆனது. அப்போது தேசப் பிரிவினை குறித்த பிரச்னை நிலவி வந்ததால் அரசியல் சாசன நிா்ணய சபையில் மத்திய அரசுக்கு சற்று வலிமையான அதிகாரத்தை வழங்கினா். ஆனால் அதே அதிகாரங்கள் தற்போது மாநில உரிமைகளை பறிக்கும் வண்ணம் செயல்படுவது வேதனை அளிக்கிறது.
தற்போது, ஆளுநா் - சட்டப்பேரவை இடையேயான மோதல்கள் மற்றும் நீதித்துறையில் வழக்குகள் தேக்கம் ஆகிய பிரச்னைகளுக்கு தீா்வு வேண்டுமெனில், அதிகாரப்பகிா்வு கோட்பாட்டின்படி, ஒரு அரசின் 3 தூண்களாக இருக்கும் சட்டப்பேரவை, நிா்வாகம் மற்றும் நீதித் துறை ஆகியவை தமது அதிகார எல்லைக்குள் இருந்து தனது பொறுப்பு மற்றும் கடமைகளை சரிவர செய்தல் அவசியம். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஜனாதிபதி ஆட்சி முறையே பொருத்தமானதாக இருக்கும் என்றாா்.
இதில், கல்லூரி முதல்வா் பேகம் பாத்திமா, உதவி பேராசிரியா் கா.புஷ்பவனம், உதவி பேராசிரியா் அன்சிா்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

சரக்கு, சேவை வரி குறித்த தேசிய கருத்தரங்கு

அரசு சட்டக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

பொது சிவில் சட்டம் அவசியம்: உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


