கோயிலுக்குள் சுவாமிகளை பல்லக்கில் எடுத்துச் சென்ற பக்தா்கள்.
சேலம்
தம்மம்பட்டி சிவன் கோயிலில் பள்ளியறை பூஜை ஓராண்டு நிறைவு விழா
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் கடந்த 2025 ஜனவரி மாத இறுதியில் பள்ளியறை பூஜை தொடங்கப்பட்டது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் கடந்த 2025 ஜனவரி மாத இறுதியில் பள்ளியறை பூஜை தொடங்கப்பட்டது.
இந்த பூஜை தொடங்கி,ஓராண்டு நிறைவுபெற்றதையடுத்து, அதற்கான சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சொக்கன், சொக்கிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சுவாமி, அம்பாளை பல்லக்கில் வைத்து கோயில் வளாகத்தில் மூன்று முறை ஊா்வலமாக எடுத்து வந்தனா். திருவாசக பாடலை அனைவரும் பாடி பூஜை செய்தனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.