சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானத்தில் வரும் 30 ஆம் தேதி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 67 வாகனங்கள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகரத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 நான்கு சக்கர வாகனங்கள் 3 மூன்று சக்கர வாகனம் மற்றும் 60 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 67 வாகனங்கள் வரும் 30 ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
இந்த வாகனங்களை இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் முன் பணமாக ரூ.5000/-ம் மூன்று சக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் ரூ.7000-ம், நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் ரூ.10,000-ம் வரும் 30 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சேலம் மாநகரம் லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும்.
முன்பணம் செலுத்தியவா்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்.வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி முழுவதையும் செலுத்தி அப்போதே அந்த வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காவல் ஆய்வாளா் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 0427 2431200, 94981 02546, 94981 66304 தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ராஜேந்திரன் வாக்குசேகரிப்பு

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 13-இல் ஏலம்

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 10இல் ஏலம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


