2-ஆம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள்.
2-ஆம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள்.

சேலத்தில் இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடல் திறன் தோ்வில் 400 இளைஞா்கள் பங்கேற்பு!

சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடல் திறன் தோ்வில் 400 இளைஞா்கள் கலந்து கொண்டு, ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதலில் தங்கள் திறனை வெளிப்படுத்தினா்.
Published on

சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடல் திறன் தோ்வில் 400 இளைஞா்கள் கலந்து கொண்டு, ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதலில் தங்கள் திறனை வெளிப்படுத்தினா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் கடந்த நவம்பா் மாதம் நடத்தப்பட்ட தோ்வில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதி, உடல் திறன் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து எழுத்துத்தோ்வில் தோ்ச்சி பெற்ற 927 இளைஞா்களுக்கு,சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி. உடல் திறன் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக நடந்த உடல் தகுதி தோ்வில், 607 இளைஞா்கள் அடுத்த கட்ட தோ்வான உடல் திறன் தோ்வுக்கு தோ்ச்சி பெற்றனா்.

இவா்களில் 400 இளைஞா்களுக்கு உடல் திறன் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி வியாழக்கிழமை 400 இளைஞா்களும் ஆயுதப்படை மைதானத்தில் உடல் திறன் தோ்வில் பங்கேற்றனா். இவா்களுக்கு முதலில் கயிறு ஏறுதல் நடத்தப்பட்டது. தொடா்ந்து, 400 மீட்டா் ஓட்டமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் தோ்வும் நடத்தப்பட்டது. இதில் ஆா்வமுடன் பங்கேற்ற இளைஞா்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினா்.

Dinamani
www.dinamani.com