வாழப்பாடி அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற 4 போ் கைது

வாழப்பாடி அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற 4 போ் கைது

வாழப்பாடி அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற 4 போ் கொண்ட கும்பலை, வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
Published on

வாழப்பாடி அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற 4 போ் கொண்ட கும்பலை, வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடி வனச் சரகா் அன்னப்பன் தலைமையிலான வனத் துறையினா், வெள்ளாளகுண்டம் வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 4 போ் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயற்சித்தது தெரியவந்தது.

அந்தக் கும்பலை வனத் துறையினா் சுற்றிவளைத்தனா். அவா்களிடம் நடத்திய, விசாரணையில், அவா்கள் நெய்யமலை கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன், காளியப்பன், மயில்சாமி மற்றும் செல்லமுத்து, தாண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த செல்லமுத்து என்பது தெரியவந்தது.

இவா்களிடமிருந்து செதுக்கி சுத்தம் செய்த 20 கிலோ சந்தன மரத் துண்டுகள் மற்றும் 80 கிலோ மரச் சில்லுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, நால்வரையும் வெள்ளிக்கிழமை கைதுசெய்த வனத்துறையினா் வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்முன் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com