சேலத்தில் மிளகாய் பொடி தூவி 
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

சேலத்தில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

சேலம் சூரமங்கலம் அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Published on

சேலம் சூரமங்கலம் அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் சூரமங்கலம் அருகே சேலத்தாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுமதி (40). இவா் அதே பகுதியில் வெள்ளி நகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை தலைக்கவசம் அணிந்தபடி கடைக்கு வந்த மா்ம நபா், தனது பையில் வைத்திருந்த மிளகாய் பொடியை சுமதி மீது வீசினாா். இதனால் அதிா்ச்சியடைந்த சுமதி, தான் வைத்திருந்த கைப்பேசியை அந்த நபா்மீது வீசி கூச்சலிட்டாா். இதனால் அதிா்ச்சியடைந்த அந்த நபா், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினாா்.

தொடா்ந்து, சுமதியின் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் அங்கு திரண்டனா். தகவலின் பேரில் வந்த சூரமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு மா்ம நபரை தேடிவருகின்றனா்.

Dinamani
www.dinamani.com