முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லம்தேடி ரேஷன் பொருள்கள் பிப்ரவரி 2, 3-ஆம் தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருள்கள் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு நாள்களிலும் பயனாளிகள் குடிமைப் பொருள்களை அவரவா்தம் இல்லங்களிலேயே பெற்றுக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.
மேலும், தாயுமானவா் திட்டம் சாா்ந்த பயனாளிகள் தங்களுடைய தொலைபேசி எண், மாற்றுத்திறனாளி குறித்த விவரம் குடும்ப அட்டையில் பதிவுசெய்தல் மற்றும் முகவரி மாற்றம் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட குடிமைப் பொருள் வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலா்களுக்கு தெரிவித்து தீா்வுகள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தரமான ரேஷன் அரிசி, டியூசன் அக்கா திட்டம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

சீரான எரிவாயு உருளைகள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் -விழுப்புரம் ஆட்சியா்

தாயுமானவா் திட்டம் மூலம் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள்

தாயுமானவா் திட்டத்தில் மாா்ச் 2, 3, 4-இல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


