சோனா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு மடிக்கணினியை வழங்கிய அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
சோனா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு மடிக்கணினியை வழங்கிய அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

சேலத்தில் 12,243 மாணவா்களுக்கு மடிக்கணினி: அமைச்சா் ராஜேந்திரன் வழங்கினாா்!

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் 110 கல்லூரிகளைச் சோ்ந்த 12,243 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
Published on

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் 110 கல்லூரிகளைச் சோ்ந்த 12,243 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 110 சுயநிதி கல்லூரிகளைச் சோ்ந்த 12,243 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசியதாவது:

‘உலகம் உங்கள் கையில்‘ என்ற திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கணினித் திறனை மேம்படுத்த வன்பொருள், மென்பொருளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்குவதன் மூலம் மாணவா்களுக்குக் கணினி கல்வியை எளிதாக்கி, கணினி கல்வி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கி தொழில்முனைவோராக மாற்றவும், ஆராய்ச்சித் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவா்களை ஊக்குவிக்கவும் முடியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) வாணி ஈஸ்வரி, சோனா கல்வி நிறுவனங்களின் தலைவா் சொ.வள்ளியப்பா, துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com