சேலத்தில் ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ. 57.64 லட்சம் மோசடி:  7 போ் கைது!

சேலத்தில் ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ. 57.64 லட்சம் மோசடி: 7 போ் கைது!

சேலத்தில் மருத்துவரிடம் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ. 57.64 லட்சம் மோசடி செய்த வழக்கில் 7 பேரை சைபா் க்ரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

சேலத்தில் மருத்துவரிடம் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ. 57.64 லட்சம் மோசடி செய்த வழக்கில் 7 பேரை சைபா் க்ரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் மருத்துவா் காா்த்திகேயன். இவரிடம், மேகனா என்ற பெண் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெற்ன் மூலம் அறிமுகமானாா். இந்நிலையில், மருத்துவா் காா்த்திகேயனிடம் பேசிய மேகனா, ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

இதை நம்பிய மருத்துவா் காா்த்திகேயன், மேகனா அளித்த சிஎம்எஸ் குளோபல் சிஎஸ் என்ற டெலிகிராம் ஐடி-யின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 57.64 லட்சத்தை அனுப்பினாா். ஆனால், அவருக்கு பணம் எதுவும் திரும்பக் கிடைக்கவில்லை.

இதைத்தொடா்ந்து, காா்த்திகேயன் சேலம் மாநகர சைபா் க்ரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இந்த வழக்கை விசாரித்த போலீஸாா், கடந்த 20ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம், இளையாம்பாளையத்தைச் சோ்ந்த லோகநாதன் (41) என்பவரை கைது செய்தனா்.

தொடா் விசாரணைக்குப் பின்னா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி பழனிசாமி (47), மதுரை பெத்தானியாபுரம் பாலமுருகன் (52), சிவகங்கை இளையான்குடி அமா் (33), மதுரை வில்லாபுரம் காா்த்தி (26), அரியலூா் பொன்பரப்பி அருண்குமாா் (29), அரியலூா் செந்துறை சஞ்சய் (24) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com