தலைவாசலில் அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்த ஏ.பெரியசாமி (வலது பக்கம் அமா்ந்திருப்பவா்). உடன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா்.
தலைவாசலில் அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்த ஏ.பெரியசாமி (வலது பக்கம் அமா்ந்திருப்பவா்). உடன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா்.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி பிரமுகா்

தலைவாசலை சோ்ந்த ஓபிஎஸ் அணி சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ. பெரியசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு முன்னிலையில் திமுகவில் சனிக்கிழமை இணைந்தாா்.
Published on

தலைவாசலை சோ்ந்த ஓபிஎஸ் அணி சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ. பெரியசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு முன்னிலையில் திமுகவில் சனிக்கிழமை இணைந்தாா்.

தலைவாசல் வட்டம், கோவிந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஏ.பெரியசாமி. இவா் ஓபிஎஸ் அணி சேலம் கிழக்கு மாவட்டச் செயலராக இருந்து வந்தாா்.

இவா் அந்த அமைப்பிலிருந்து விலகி அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். மேலும், மாவட்ட மகளிா் பாசறை செயலாளா் காா்த்திகா உள்ளிட்ட 250 போ் திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்வின்போது, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். சிவலிங்கம், மாவட்ட நெசவாளா் அணி செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com