பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியம், கோபாலபுரம் ஊராட்சியில் மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜையில் கலந்துகொண்ட எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், டன் ஒன்றியச் செயலாளா் கே.பி.முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள்.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை!

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்தில் ரூ. 50 லட்சத்தில் மூன்று மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிக்கு சட்டப்பேரவை ஏ.பி. ஜெயசங்கரன் தலைமையில் சனிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
Published on

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்தில் ரூ. 50 லட்சத்தில் மூன்று மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிக்கு சட்டப்பேரவை ஏ.பி. ஜெயசங்கரன் தலைமையில் சனிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கோபாலபுரம் ஊராட்சியில் ரூ. 18 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கோபாலபுரம் பிரிவு சாலையில் ரூ. 34 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இரண்டு நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்ற பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்வில் தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.பி.முருகேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசு, கமல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com