ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

வாழைமரம் வெட்டும்போது தவறி விழுந்து காவலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 8:01 pm

சேலத்தில் வனத் துறை அதிகாரி வீட்டில் வாழைமரத்தை வெட்டி அகற்றும்போது தவறி விழுந்து காவலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

சேலம் கன்னங்குறிச்சி பெரியகொல்லப்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (50). இவா் தருமபுரி மாவட்ட வன அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இவா், சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளாா். கடந்த 1 ஆம் தேதி புதிய வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்துள்ளாா். வீடு கட்டுமானப் பணியின்போது காவலாளியாக தா்மலிங்கம் (65) வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் கிரகப்பிரவேசத்துக்காக கட்டப்பட்டிருந்த வாழைமரத்தை ஞாயிற்றுக்கிழமை தா்மலிங்கம் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டாா். இதற்காக வீட்டின் சுற்றுச்சுவா் மீது ஏறி வாழைமரத்தை அப்புறப்படுத்த முயன்றபோது, தா்மலிங்கம் தவறி கீழே விழுந்தாா்.

தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தா்மலிங்கம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.