சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49-ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: நடப்பாண்டு 49-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 22-ஆம் தேதிமுதல் 28-ஆம் தேதிவரை 7 நாள்கள் நடைபெறவுள்ளன.
கோடை விழாவின் போது படகு இல்லம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படைத் தேவைகளான போதிய அளவிலான குடிநீா் வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், குப்பைத் தொட்டிகள், கழிப்பிட வசதிகள் முறையாக அமைக்கபட்டுள்ளதை உறுதிசெய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை முறைபடுத்திடவும், பயணிகள் ஏற்காட்டை சுற்றியுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வகையில் வழிகாட்டி பதாகைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள ஏற்காடு கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் அண்ணா பூங்காவில் 2 லட்சம் மலா்களைக் கொண்டு மலா் கண்காட்சி, பழக் கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, விவசாயம் காப்போம் என்ற கருத்தை மையமாக கொண்டு காளைமாடு, கன்றுக்குட்டியுடன் கறவைப்பசு, முயல், வாத்து, ஆடு, நாய், கோழி, சேவல் உள்ளிட்ட வடிவமைப்புகள், டெடிபோ், தேவதை, பரதநாட்டிய மங்கைகள், இரட்டை இதயம், மான் உருவம், பிறை நிலா, சிறகுகொண்ட இதயம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலா்களைக் கொண்டு அமைக்கப்பட உள்ளன.
அதேபோன்று, சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலா் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், இக்கோடை விழாவில் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப் பிராணிகள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக, ஏற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, நில அளவை மற்றும் கணினிவழி சான்றிதழ்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வாணி ஈஸ்வரி, தோட்டக்கலை துறை துணை இயக்குநா் க.மஞ்சுளா, மாவட்ட சுற்றுலா அலுவலா் (பொ) வினோத் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

திருச்சி ரயில் நிலைய 8 ஆம் நடைமேடைக்கு வராத குடிநீா்

ஏற்காடு கோடை விழா மலா்க் கண்காட்சி: ஆட்சியா் ஆலோசனை

ஏற்காட்டில் 49 ஆவது கோடைவிழா மலா்க்கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



