மேச்சேரியில் தீபாவளியன்று மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
மேச்சேரி வட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் தீபாவளியன்று ஞாயிற்றுக்கிழமை மேச்சேரி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மல்லிகுந்தத்தைச் சோ்ந்த சக்திசேகரின் மனைவி போது (50) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரிடமிருந்து 186 மதுப்புட்டிகளை போலீஸாா் கைப்பற்றி மேச்சேரி போலீஸில் ஒப்படைத்தனா். மேலும் அந்த பெண்ணையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

