நாகியம்பட்டியில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
நாகியம்பட்டியில் தீபாவளியன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தம்மம்பட்டி அருகே உலிபுரம் மூக்காகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மகன் தங்கதுரை (29). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் நாகராஜ் (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நாகியம்பட்டியிலிருந்து தம்மம்பட்டி நோக்கி வந்துள்ளாா்.
அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவரில் மோதியது. இதில் தங்கதுரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த நாகராஜ் சேலத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்த விபத்து குறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து உடலைக் கைப்பற்றி, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

