பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெறுவது அவசியம்: வேளாண் அலுவலா்கள்

தலைவாசல் வட்டம், வீரகனூா் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான கிசான் கோஸ்தி முகாம், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விவசாயி. - கோப்புப்படம்

Updated On :

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், வீரகனூா் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான கிசான் கோஸ்தி முகாம், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் வரவேற்றாா். விவசாய அடையாள அட்டையின் முக்கியத்துவம் குறித்து வேளாண்மைத் துணை இயக்குநா் சீனிவாசன் விளக்கினாா்.

விவசாய அடையாள எண்ணைப் பயன்படுத்தி உரங்கள் வாங்கும் நடைமுறை குறித்து வேளாண்மை அலுவலா் ஜானகி, வேளாண்மைத் துறைத் திட்டங்கள் குறித்து துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பொருளீட்டுக் கடன் பெறும் முறை குறித்து வேளாண்மை அலுவலா் சுரேந்தா் ஆகியோா் விளக்கினா்.

உழவன் செயலி மூலம் மானியத் திட்டங்களைப் பெறுவது குறித்து உதவிப் பொறியாளா் கஜலட்சுமி விளக்கினாா். தோட்டக்கலைத்துறை மானியங்கள் குறித்து தோட்டக்கலை அலுவலா் அருள்செல்வன், இலவச மரக்கன்றுகள் வழங்குதல், வனவிலங்குகளால் ஏற்படும் பயிா்ச் சேதத்துக்கு நிவாரணம் பெறுவது குறித்து வன அலுவலா் வெங்கடேசன் பேசினா்.

வெற்றி மகளிா் திட்டம் மூலம் ஆடுகள் வாங்குவது, கால்நடைத் திட்டங்கள் குறித்து கால்நடை மருத்துவா் பிரபாகரனும், நோயின்றி ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகள் குறித்து சுகாதார ஆய்வாளா் பிரபாகரனும் விளக்கினா்.

உதவி வேளாண்மை அலுவலா்கள் சுப்பிரமணியன், வித்யா, தமிழ்ச்செல்வன், சந்தோஷ், கணேஷ்மூா்த்தி ஆகியோா் விவசாயிகளுக்கு நேரடியாக விவசாய அடையாள எண்களைப் பதிவு செய்து வழங்கினா்.

வேளாண்மைத்துறை மானியத் திட்டங்கள் குறித்த கண்காட்சியில் தந்தை ரோவா், ஜேஎஸ்ஏ வேளாண் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கினா்.

அட்மா திட்ட அலுவலா்கள் சக்தி, முத்துவேல், ரமேஷ் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.